Skip to main content

ஊழியர்களுக்கு பார்க்கிங் கட்டணம் விதித்த இன்ஃபோசிஸ் நிறுவனம்!

Published on 09/05/2019 | Edited on 09/05/2019

ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் இன்ஃபோசிஸ் நிறுவனம்,தனது ஊழியர்களுக்கே பார்க்கிங் கட்டணம் விதித்துள்ளது. இதனால் ஊழியர்களுக்கிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இரு சக்கர வாகனங்களுக்கு ரூபாய் 250 , கார்களுக்கு ரூபாய் 500 ஊழியர்களின் மாத சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தை ஊழலுக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த விஜயன் கோபால் வெளிச்சத்துக்கு  கொண்டு வந்துள்ளார். இந்த நிறுவனம் "சிறப்பு பொருளாதார மண்டலத்தின்" கீழ் இயங்கி வருவதாகவும், அரசின் சலுகைகள்  அனைத்தையும் இந்த நிறுவனம் பெற்று வருவதால் , இது தொடர்பாக அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

 

 

INFOSYS

 

 

இது குறித்து இன்ஃபோசிஸ் செய்தித் தொடர்பாளர் அளித்துள்ள விளக்கத்தில் இன்ஃபோசிஸ் ஊழியர்களுக்கு நல அறக்கட்டளை இருப்பதாகவும் , ஊழியர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் பார்க்கிங் கட்டணம் அறக்கட்டளைக்கும், பார்க்கிங் இடங்களை பராமரிக்க செலவிடப்படுவதாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே போல் இந்தியாவில் உள்ள மற்ற மென்பொருள் நிறுவனங்களும் இத்தகைய முடிவை எடுக்க அதிக வாய்ப்பு உள்ளதால் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தகவல் தொழில் நுட்ப துறையில் பணியாற்றும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ராமோஜி ராவ் மறைவு; பிரதமர் மோடி இரங்கல்!

Published on 08/06/2024 | Edited on 08/06/2024
Ramoji Rao passed away Condolences to Prime Minister Modi

ராமோஜி பிலிம் சிட்டி நிறுவனரும், ஈநாடு பத்திரிகை நிறுவனருமான ராமோஜி ராவ் (வயது 87) காலமானார். உடல்நலக் குறைவால் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ராமோஜி ராவ் சிகிச்சை பலனின்றி இன்று (08.06.2024) அதிகாலை 03:45 மணிக்கு உயிரிழந்தார். பத்திரிகை, இலக்கியம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான பத்ம விபூஷண் விருதை மத்திய அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ராமோஜி ராவின் இறுதிச் சடங்குகளை அரசு மரியாதையுடன் செய்ய தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது.  காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றுள்ள தெலங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டி, மாநில தலைமைச் செயலருக்கு இது தொடர்பாக உத்தரவிட்டுள்ளார். அதில் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிட, ரங்காரெட்டி மாவட்ட கலெக்டர் மற்றும் சைபராபாத் கமிஷனருக்கு தலைமைச் செயலர் மூலம் முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார் எனத் தெலுங்கானா மாநில முதல்வர் அலுவலகம் இச்செய்தியை வெளியிட்டுள்ளது. 

Ramoji Rao passed away Condolences to Prime Minister Modi

அதே சமயம் ராமோஜி ராவின் மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ராமோஜி ராவின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. இந்திய ஊடகத்தில் புரட்சியை ஏற்படுத்திய தொலைநோக்கு பார்வையாளராக இருந்தார். அவரது செழுமையான பங்களிப்புகள் பத்திரிகை மற்றும் திரைப்பட உலகில் அழியாத முத்திரையை பதித்துள்ளன.

அவரது குறிப்பிடத்தக்க முயற்சிகள் மூலம், அவர் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு உலகில் புதுமை மற்றும் சிறப்பிற்கான புதிய தரங்களை அமைத்தார். ராமோஜி ராவ் இந்தியாவின் வளர்ச்சியில் அதீத ஆர்வம் கொண்டிருந்தார். நான் அவருடன் பழகி அவருடைய ஞானத்தால் பயனடைந்து பல வாய்ப்புகளைப் பெற்ற அதிர்ஷ்டசாலி ஆவேன். இந்தக் கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

ராமோஜி பிலிம் சிட்டி நிறுவனர் காலமானார்!

Published on 08/06/2024 | Edited on 08/06/2024
Ramoji Film City Founder Ramoji Rao Passes Away

ராமோஜி பிலிம் சிட்டி நிறுவனரும், ஈநாடு பத்திரிகை நிறுவனருமான ராமோஜி ராவ் (வயது 87) காலமானார். உடல்நலக் குறைவால் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ராமோஜி ராவ் சிகிச்சை பலனின்றி இன்று (08.06.2024) அதிகாலை 03:45 மணிக்கு உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ராமோஜி ராவின் மறைவுக்குத் தெலுங்கானா பாஜக தலைவரும், அக்கட்சியின் எம்.பி.யுமான ஜி. கிஷன் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஊடகத்துறையின் முன்னோடியாகவும், தகவல் துறையில் பல சீர்திருத்தங்கள் மற்றும் விழுமியங்களுக்கு முன்னோடியாகவும் இருந்த ராமோஜி ராவ் இன்று மறைந்தார் என்பதை அறிந்து மிகுந்த வருத்தமடைகிறேன். அர்ப்பணிப்புடனும், ஒழுக்கத்துடனும், விடாமுயற்சியுடனும் பணியாற்றியவர் ஆவார்.

ராமோஜி ராவின் மறைவு தெலுங்கு ஊடகத்துறைக்கும், தொலைக்காட்சித் துறைக்கும், தெலுங்கு மாநிலங்களுக்கும் மிகப்பெரிய இழப்பாகும். ராமோஜி ராவின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதுடன், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.