![Human finger in ice cream at maharashtra](http://image.nakkheeran.in/cdn/farfuture/e2pV0Ja00hYsIVzEuYDkfjrGW5zfMUWEktXbx3t7Rbc/1718262111/sites/default/files/inline-images/icecreamni.jpg)
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையின் மலாட் பகுதியில் உள்ள பெண் ஒருவர், ஆன்லைனின் ஐஸ்கிரீம் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அதன்படி, ஐஸ்கிரீம் அந்தப் பெண்ணின் கைக்கு வந்துள்ளது. ஐஸ்கிரீம் கவரை பிரித்த பார்த்த போது, அதில் மனித விரலின் துண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து அந்தப் பெண் மலாட் காவல் நிலையத்தை அணுகி புகார் அளித்தார். புகாரின் பேரில், ஐஸ்கிரீம் நிறுவனமான யும்மோ ஐஸ்கிரீம் நிறுவனத்திற்கு எதிரான வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஐஸ்கிரீமுக்குள் கண்டெடுக்கப்பட்ட மனித உறுப்பை பரிசோதனைக்காக தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐஸ்கிரீம் கூம்புக்குள் மனித விரலின் துண்டை கண்டெடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.