Skip to main content

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,500 மதிப்பிலான மெகா பண மோசடி!

Published on 15/02/2018 | Edited on 15/02/2018

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தேசிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடான முறையில் பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

pnb

 

மகாராஷ்டிரா மாநிலம் தெற்கு மும்பை பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளையில் இந்த மோசடியானது நடைபெற்றுள்ளது. முன்னதாக இந்தக் கிளையில் வைர வியாபாரி நீரவ் மோடி என்பவர் இதே வங்கிக் கிளையில் வேலை செய்யும் ஊழியர்கள் உதவியோடு ரூ.280 கோடி பண மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து நீரவ் மோடி, அவரது மனைவி மற்றும் சகோதரர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கிளையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற துணை மேலாளர் கோகுல்நாத் செட்டி, தற்போது பணிபுரியும் மனோஜ் கட்டார் உள்ளிட்டோரின் மீதும் புகாரளிக்கப் பட்டுள்ளது. 

 

இந்நிலையில், அந்தக் கிளையில் வெளிநாடுகளுக்கு முன்கூட்டியே பணப்பரிவர்த்தனை செய்யும் முறையில் ரூ.11,500 கோடி அளவிற்கு மெகா மோசடி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது வெளிநாடுகளில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ‘ஸ்விப்ட்’ முறையில் பணப்பரிவர்த்தனை செய்வதில் இந்த முறைகேடு நடந்தேறியுள்ளது. பொருட்களை ஏற்றுமதி செய்யும்போது, இரு நிறுவனங்கள் செய்துகொள்ளும் ஒப்பந்தத்தினால் முன்கூட்டியே பணப் பரிவர்த்தனை செய்வது நடைமுறையில் இருந்துள்ளது. மத்திய ரிசர்வ் வங்கியின் பல்வேறு விதிமுறைகளை பின்பற்றாமல், வங்கி ஊழியர்கள் சுய லாபத்திற்காக முறைகேடில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்தக் கிளையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்றுள்ள இந்த மோசடியால், அந்த வங்கி பங்குகள் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. இதனால், அந்த வங்கிக்கு ரூ.3,500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தாய்க்கு பணம் கொடுக்கிறார் என கணவர் மீது மனைவி புகார்; மும்பை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Mumbai court sensational verdict for Wife complains about husband giving money to mother

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள தலைமைச் செயலகத்தில் உதவியாளராக 43 வயது பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இவர் மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் குடும்ப வன்முறை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தனது கணவர் மற்றும் மாமியார் மீது வழக்கு தொடர்ந்தார்.

அவர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது, ‘என் கணவர் கடந்த 1993ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2004ஆம் ஆண்டு டிசம்பர் வரை வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். அந்த நேரத்தில் விடுமுறை நாட்களில் அவ்வப்போது இந்தியா வருவார். அப்போது, இங்கு வரும்போதெல்லாம் அவர் அவரது தாயுடன் தான் அதிக நேரத்தை செலவிடுவார். அவரது தாய்க்கு ஆண்டுதோறும் ரூ.10,000 பணம் கொடுப்பார். மேலும், அவரது கண் சிகிச்சைக்கும் என் கணவர் தான் முழு பணத்தை செலவழித்தார். எனது மாமியார் மனம் நலம் சரியில்லாதவர். அதை மறைத்து என் கணவர் என்னை திருமணம் செய்துவிட்டார். என் மாமியாரும், என் கணவரின் உறவினர்களும் என்னை மிகவும் கொடுமைப்படுத்துகின்றனர். எனவே, எனக்கு பாதுகாப்பு வழங்கி உரிய நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு நேற்று (14-02-24) மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனைவி வைத்த குற்றச்சாட்டை மறுத்த கணவர், “என்னை கணவராக என் மனைவி ஏற்றுக் கொண்டதில்லை. எனது என்.ஆர்.ஐ வங்கி கணக்கில் இருந்து எனக்கு தெரியாமல் ரூ.21.68 லட்சம் பணம் எடுத்து வீடு வாங்கி உள்ளார். அவரிடமிருந்து விவகாரத்து பெற குடும்ப நல நீதிமன்றத்தை நான் அணுகினேன். அதன் காரணமாகவே, எனக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்” என்று கூறினார்.

இதனையடுத்து, இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த கூடுதல் அமர்வு நீதிபதி ஆஷிஷ் அயோசித் தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், ‘தனது தாய்க்காக பணத்தையும், நேரத்தையும் செலவிடுவதை குடும்ப வன்முறையாக கருத முடியாது. மனுதாரர் தனக்கு நேர்ந்ததாக கூறப்படும் பாதிப்புகளை நிரூபிக்க தவறவிட்டார். மேலும், மனுதாரர் வேலை பார்த்தும், மாத ஊதியமும் பெற்று வருகிறார். எனவே, அவர் எந்த நிவாரணமும் பெற சட்டப்படி உரிமையில்லை’ எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

Next Story

‘சந்தா கோச்சாரை கைது செய்தது சட்டவிரோதம்’ - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Arrest of Chanda Kochhar is illegal  High Court action order

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான சந்தா கோச்சாரின் கணவர் தீபக் நடத்தி வந்த நிறுவனத்தில் வீடியோகான் குழுமம் முதலீடு செய்தது. அதற்காக வீடியோகான் நிறுவனத்திற்கு ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் இருந்து ரூ. 3,250 கோடி கடன் அளிக்கப்பட்டிருந்தது. இதில் கடன் பெற தகுதியில்லாத வீடியோகான் குழும நிறுவனங்களுக்கு கடன் வழங்கியதன் மூலம் சந்தா கோச்சாரின் கணவர் தீபக் ரூ. 64 கோடி பெற்றதாக புகார் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து சந்தா கோச்சார், தனது பதவியில் இருந்து விலகினார். அதன்பின் சந்தா கோச்சார், அவரது கணவர் மற்றும் வீடியோகான் நிறுவன அதிபர் வி.என்.தூத் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது. அதன் பின்னர் சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் ஆகியோர் சிபிஐயால் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை மும்பை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் ஆகியோர் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் இருவருக்கும் கடந்த 2023 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனையும் உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.