Skip to main content

ஹிமாச்சலப்பிரதேச முதல்வருக்கு கரோனா தொற்று...

Published on 12/10/2020 | Edited on 12/10/2020

 

himachal cm testes positive for corona

 

 

ஹிமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்குருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் களப்பணியாளர்களான தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், ஹிமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்குருக்கு கரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "சில நாள்களுக்கு முன்பு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நபருடன் தொடர்பிலிருந்ததால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டேன். கடந்த 2 நாள்களாக கரோனா தொற்று அறிகுறிகள் இருந்ததால், இன்று பரிசோதனை மேற்கொண்டேன். அதன் முடிவில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நான் வீட்டிலேயே தனிமைப்படுத்தியுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்