mos petroleum

இந்தியாவில்பெட்ரோல் - டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயைக் கடந்துள்ளது. இந்த நிலையில்மத்தியபெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணையமைச்சர்ராமேஸ்வர் தெலிபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு இலவசமாக கரோனாதடுப்பூசிகள் வழங்கப்படுவதேகாரணம் எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment

அசாம் மாநிலம்கவுகாத்தியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், இதுதொடர்பாககூறியதாவது; பெட்ரோல் ஒன்றும் விலை உயர்வானது அல்ல.மத்திய மற்றும் மாநில அரசுகள் பெட்ரோலுக்கு வரி விதித்துள்ளன. நீங்கள் கரோனாதடுப்பூசிகளைஇலவசமாகப் பெறுகிறீர்கள். கரோனா தடுப்பூசிகளுக்கான பணம் எங்கிருந்து வரும்? நீங்கள் தடுப்பூசிகளுக்குப் பணம் செலுத்துவதில்லை. தடுப்பூசிகளுக்கான விலை இந்த வரிகளிலிருந்து வருகிறது.

Advertisment

நமது அரசு 130 கோடி மக்களுக்கு இலவசமாகத் தடுப்பூசி போடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒரு தடுப்பூசியின் விலை சுமார் 1,200 ரூபாய். ஒவ்வொரு நபருக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும்.ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 40 ரூபாய்தான். மத்திய மற்றும் மாநில அரசுகள் பெட்ரோலுக்கு வரி விதித்துள்ளன. நாட்டில் குறைந்தபட்ச மதிப்பு கூட்டப்பட்ட வரி விதித்துள்ள ஒரே மாநிலம் அசாம் தான். பெட்ரோல் மீது அந்த மாநிலமானது 28 ரூபாயைமதிப்பு கூட்டு வரியாகவிதித்துள்ளது. எங்கள் அமைச்சகம் (மத்தியபெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை) 30 ரூபாயை வரியாக விதித்துள்ளது.

நீங்கள் இமயமலை நீரைக் குடிக்க விரும்பினால், ஒரு பாட்டிலுக்கு ரூ .100 ஐ செலுத்த வேண்டும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் போது பெட்ரோல், டீசல் விலை தானாகவே உயரும். எங்கள் அமைச்சகம் எண்ணெய் பொருட்களின்விலையை நிர்ணயிக்கவில்லை. வர்த்தக துறை அதை நிர்ணயிக்கிறது. நிர்ணயிக்கப்படும் விலை சர்வதேச சந்தையுடன்தொடர்புடையது. அண்மையில் எங்களதுஅமைச்சகத்தின் நிதி கரோனாசூழ்நிலையை சமாளிக்க சுகாதாரத்துறை அமைச்சகத்திற்குத் திருப்பிவிடப்பட்டது.

இவ்வாறு ராமேஸ்வர் தெலிதெரிவித்தார்.

மேலும் அந்த நிகழ்ச்சியில் பேசிய அசாம் மாநில பாஜக தலைவர், ஒரு மோட்டர்சைக்கிளில் மூன்று பேர் செல்ல வேண்டும் எனவும், மக்கள் நடக்க பழக வேண்டும் எனவும் தெரிவித்தார்.