Skip to main content

இனி குழந்தைகளை பைக்கில் அழைத்துச்செல்ல புதிய விதிமுறைகள்... மத்திய அரசு அறிவிப்பு!

Published on 16/02/2022 | Edited on 16/02/2022

 

Helmets are mandatory for children traveling in two-wheelers!

 

இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லப்படும் நான்கு வயதுக்கு கீழான குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்ற விதிமுறை அடுத்தாண்டு அமலுக்கு வருகிறது. 

 

இரு சக்கர வாகனத்தில் செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், மோட்டார் வாகன சட்டத்தில் சில திருத்தங்கள் செய்து மத்திய சாலை போக்குவரத்துத்துறை அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லப்படும் நான்கு வயதுக்கு கீழான குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறை வரும் 2023- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15- ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். 

 

குழந்தைகளுக்கான ஹெல்மெட்டுகளை உற்பத்திச் செய்யும்படி, அதன் தயாரிப்பாளர்களையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இரு சக்கர வாகனத்தில் குழந்தைகளை அழைத்துச் செல்லும் போது, 40 கி.மீ. வேகத்திற்கு மேல் செல்லக் கூடாது என்ற விதியும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவைத் தவிர ஓட்டுநருடன் குழந்தைகளைப் பாதுகாப்பான வகையில் பிணைக்கும் வகையிலான பட்டையையும் மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. 

 

இதன்படி, நைலான் போன்ற எடைக் குறைந்த எளிதாக மாற்றி அமைத்துக் கொள்ளக்கூடிய, அதே நேரம் வலுவாக பிணைக்கக் கூடிய பட்டைகள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்விதிகளை மீறுவோருக்கு ரூபாய் 1,000 அபராதம்; ஓட்டுநர் உரிமத்தை மூன்று மாதத்திற்கு முடக்கி வைக்கவும் புதிய விதி வகை செய்கிறார். 

 

 

சார்ந்த செய்திகள்