இந்திய மென்பொருள் நிறுவனமான எச்.சி.எல் ஆந்திர மாநிலத்தில் 750 கோடி ரூபாய் முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. மேலும் இதன் மூலம் அடுத்த பத்து ஆண்டுகளில் 7,500 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
இந்த 750 கோடியை ஆந்திராவிலே இரண்டு இடங்களில் முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. முதற்கட்டமாக நோய்டாவில் இருக்கும் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு செய்யற்பாட்டுக்காக கேசரப்பள்ளி (Kesarapalli) கிராமத்தில் 400 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்போவதாகவும், அதன் மூலம் 4,000 மென்பொருளியலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளது. பின் சில காலங்கள் கழித்து அந்திரப்பிரதேசத்தின் புதிய தலைநகரமான அமராவதியில் இருவது ஏக்கர் நிலத்தில் 350 கோடி ரூபாய் செலவில் இரண்டாவதாக அமைக்கப்போகும் நிறுவனத்தில் ஐந்து வருடங்களில் 3,500 மென்பொருளியலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் எச்.சி.எல்.நிறுவனம் அறிவித்துள்ளது.