Skip to main content

ஞானவாபி மசூதியில் தடயவியல் பரிசோதனை செய்ய இடைக்காலத் தடை; உச்சநீதிமன்றம் அதிரடி

Published on 19/05/2023 | Edited on 19/05/2023

 

gyanvapi mosque supreme court judgment forensic carbon dating related research

 

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி அருகே உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் ஞானவாபி மசூதி என்னும் இஸ்லாமிய வழிபாட்டுத் தலம் ஒன்று உள்ளது. இங்கு இந்து மத கடவுளான சிவலிங்கம் ஒன்று கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மசூதியில் கண்டறியப்பட்ட லிங்க வடிவிலான பொருளின் காலத்தைக் கண்டுபிடிக்க தடயவியல் பரிசோதனை செய்ய அனுமதிக்கக் கோரி நான்கு பேர் சார்பில் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை மாவட்ட நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்தார்.

 

அதைத் தொடர்ந்து இந்த தீர்ப்பை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் போது மசூதி வளாகத்தில் தடயவியல் சோதனை மேற்கொள்ள அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி ஞானவாபி மசூதியை மேற்பார்வை செய்து வந்த அமைப்பு டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

 

இந்நிலையில் இஸ்லாமிய அமைப்புகளின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஞானவாபி மசூதி வளாகத்தில் தடயவியல் சோதனை நடத்தலாம் என்ற அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் முடிவு எதிரொலி- 'இந்தியா' கூட்டணி வெளியிட்ட திடீர் அறிவிப்பு

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

Election result reverberation - sudden announcement made by 'India' alliance

 

தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டமாக தேர்தல்கள் நடந்து முடிந்தது. தொடர்ந்து தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில் மிசோரத்தை தவிர்த்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

 

முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் காலை 11 மணி நிலவரப்படி தெலுங்கானாவில் 63 இடங்களில் காங்கிரஸ் முன்னிலையிலும், பிஆர்எஸ் 42 இடங்களிலும், பாஜக  9 இடங்களிலும், மற்றவை 5 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

 

மத்தியப் பிரதேசத்தில் பாஜக 154 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், காங்கிரஸ் 72 இடங்களிலும் மற்றவை 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. ராஜஸ்தானில் பாஜக 106 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், காங்கிரஸ் 76 இடங்களிலும், மற்றவை 12 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சத்தீஸ்கரில் 45 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ள நிலையில் காங்கிரஸ் 43 இடங்களில் முன்னிலையில் உள்ளது. நாளை மிசோரம் மாநில வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

 

5 மாநில தேர்தல் முடிவுகள் அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்குமா அல்லது இல்லையா என்பது தொடர்பான கருத்துக்கள் எழுந்து வருகிறது.  5 மாநில சட்டப்பேரவை தேர்தல் காரணமாக 'இந்தியா' கூட்டணியின் ஆலோசனைக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி 'இந்தியா' கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை மல்லிகார்ஜுன கார்கே கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் நடைபெறும் இக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வார் எனவும் கூறப்படுகிறது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

மசோதா விவகாரம்; ஆளுநர் தரப்புக்கு கடுமை காட்டிய உச்சநீதிமன்றம்!

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

governor vs supreme court

 

ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வில் இன்று நடைபெற்றது.

 

ஆளுநர் தரப்பிலிருந்து மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டது எனக் கூறப்பட்டபோது, “அது தொடர்பான கோப்புகள் சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்பப்பட்டதா? ஆளுநருக்கு சட்டத்தை செயலிழக்க வைக்கவோ, முடக்கி வைக்கவோ (Kill the Bill) அதிகாரம் இல்லை. குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதாக இருந்தால் ஆளுநர் முதலிலேயே செய்திருக்க வேண்டும். மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியாது.

 

ஆளுநர், ஒன்றிய அரசின் NOMINEE என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இவ்விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சரை அழைத்து இந்த பிரச்சனையை பேசித் தீர்க்க வேண்டும்” என்று அறிவுறுத்திய உச்சநீதிமன்ற நீதிபதிகள், “சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது ஏன்? மசோதாக்கள் மீது முடிவெடுக்கும் விவகாரத்தில் ஆளுநரே முடிவெடுக்க வேண்டும். காலதாமதம் செய்தால் மசோதாக்கள் விசயத்தில் நாங்கள் உத்தரவிட நேரிடும்” எனக்  கடுமை காட்டியதுடன், வழக்கு விசாரணையை 11 ஆம் தேதி ஒத்திவைத்தனர்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்