/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/gujajaa.jpg)
நாடு முழுவதும் கரோனாஇரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இரண்டு லட்சத்திற்கு மேற்பட்டவர்களுக்கு கரோனாபாதிப்பு ஏற்பட்டுள்ளது. கரோனாஅதிகரித்து வரும் நிலையில் வரும் 8 ஆம் தேதி, பிரதமர் மாநில முதல்வர்களோடு ஆலோசனை நடத்தவுள்ளார்.
குஜராத் மாநிலத்திலும் தொடர்ந்து கரோனாதொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில்3 ஆயிரத்து 160 பேருக்கு கரோனா உறுதியாகிவுள்ளது. மேலும் கரோனாபாதிக்கப்பட்ட 15 பேர் உயிரிழந்தனர். இந்தநிலையில்குஜராத்தில் ஊரடங்கைஅமல்படுத்த கோரியவழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, குஜராத்தில் ஊரடங்கு போன்ற கடுமையான கட்டுப்பாடுகளுக்கான தேவை இருப்பதாக குஜராத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் குஜராத்தில் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம்எனவும், அல்லது வார இறுதிநாட்களில்ஊரடங்கை அமல்படுத்தலாம்எனதெரிவித்துள்ள குஜராத் உயர்நீதிமன்றம் இதுகுறித்து முடிவெடுக்குமாறு அம்மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)