Grieshma was taken to Kanyakumari and the police investigated!

காதலனுக்கு நஞ்சுகொடுத்து கொலை செய்த வழக்கில் இளம்பெண் கிரீஷ்மாவை கன்னியாகுமரிக்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

Advertisment

கேரளாவைச் சேர்ந்த ஷாரோன் என்ற மாணவரை கன்னியாகுமரி மாவட்டத்தில் வசிக்கும் கிரீஷ்மா என்பவர் குளிர்பானத்தில் நஞ்சுகலந்துகொடுத்து கொலை செய்ததாகப் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் விசாரணை மேற்கொண்டகேரள மாநில காவல்துறையினர் நஞ்சு கொடுத்து கொலை செய்ததை உறுதி செய்தனர். இது தொடர்பாக, கைது செய்யப்பட்ட கிரீஷ்மா, அவரது தாயார் மற்றும் தாய் மாமா ஆகியோரைகாவலில் எடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், ராமவர்மன் சிறை பகுதியில் உள்ள கிரீஷ்மாவின் வீட்டிற்கு அவரை அழைத்துச் சென்று தமிழக காவல்துறையினரின் உதவியுடன் விசாரணை நடைபெற்றது. ஷாரோனுக்கு உணவுப் பரிமாறிய பாத்திரங்களைகாவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.