Published on 10/07/2021 | Edited on 10/07/2021
டெல்லியில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று (10.07.2021) பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார். தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டின் புதிய ஆட்சிக்குப் பிறகு முதன்முறையாக பிரதமரை ஆளுநர் பன்வாரிலால் இன்று மாலை 4 மணிக்கு சந்திக்க இருக்கிறார்.
தமிழ்நாட்டு அரசியல், சூழல் நிலவரம் உள்ளிட்டவை குறித்து அவர் பிரதமருடன் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் 7 பேர் விடுதலை, நீட் விவகாரம் உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் கோரிக்கைகள் பற்றியும் விவாதிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பை அடுத்து ஆளுநர் பன்வாரிலால் நாளை உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.