உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 13 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 74 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 60-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 4000க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் போராடி வருகின்றது.

g

மனிதர்களை மட்டும் அச்சுறுத்தி வந்த இந்த கரோனா தொற்று, தற்போது விலங்குகளுக்கும் பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள புரேன்ஸ் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் பெண் புலி ஒன்றுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்தியா முழுவதும் உள்ள உயிரியல் பூங்காக்களை கண்காணிக்க மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment