Skip to main content

ஹோட்டலில் நேர்ந்த விபரீதம்; உயிருக்குப் போராடும் காதலன்

Published on 09/06/2023 | Edited on 09/06/2023

 

girlfriend who attacked her cheating boyfriend

 

பீகார் மாநிலம் சீதாமரி என்ற பகுதியைச் சேர்ந்தவர் துணை ராணுவப் படை வீரர் சூர்யபூஷண் குமார். இவரும், நேஹா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து நேஹா தன்னை திருமணம் செய்துகொள்ள சூர்யபூஷணை வற்புறுத்தியுள்ளார். இதனையடுத்து காதலியின் வற்புறுத்தலைத் தொடர்ந்து பாட்னா வந்த சூர்யபூஷண், நேஹாவை பதிவு திருமணம் செய்துள்ளார். 

 

திருமணத்தை முடித்த கையோடு, இருவரும் அங்கே உள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளனர். மறுநாள் சூர்யபூஷண், தனக்கு பெற்றோர்கள் திருமணத்திற்கு பெண் பார்த்துள்ளனர். அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்துகின்றனர் என நேஹாவிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நேஹா, நமக்கு நடந்த பதிவு திருமணம் குறித்து வீட்டில் தெரிவியுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் இதனை சூர்யபூஷண் காதில் வாங்கிக் கொள்ளாததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

 

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிப்போக என்னை ஏமாற்றினால் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டியுள்ளார் நேஹா. ஆனால் இதற்கெல்லாம் சூர்யபூஷண் பிடி கொடுக்காததால் ஆத்திரமடைந்த நேஹா, தான் கையில் வைத்திருந்த கத்தியை வைத்து சூர்யபூஷண் ஆண் உறுப்பில் குத்தியுள்ளார். இதனால் வலி தாங்க முடியாமல் துடித்த சூர்யபூஷண் நடந்தவற்றை விடுதி ஊழியர்களிடம் தெரிவித்து அவர்கள் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் அடிப்படியில் வழக்குப் பதிவு செய்த போலீசார் நேஹாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டு வேலைக்கு சென்ற 13 வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை!

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Youth misbehave with a 13-year-old girl while doing domestic work

அரியானா குர்காவன் பகுதியில் உள்ள வீட்டில் வேலை செய்வதற்காக 13 வயது சிறுமியை மாதம் 9 ஆயிரம் சம்பளத்திற்கு கடந்த ஜூன் மாதம் வேலைக்கு சேர்த்துள்ளனர். முதல் இரண்டு மாதத்திற்கு மட்டும் அந்த பெண்ணின் தாயாருக்கு சம்பளப் பணத்தை வீட்டின் உரிமையாளர் சசி என்ற பெண் கொடுத்துள்ளார். ஆனால் அதன் பின் சம்பளப்பணத்தை கொடுக்காமல் இருந்துள்ளனர். அத்தோடு, சிறுமியை பார்க்க கூட அவரின் தாய்க்கு அனுமதி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில் தான், சிறுமியை வேலைக்கு சேர்த்த நாள் முதல் அவருக்கு சரியான உணவு கொடுக்காமல் தொடர்ந்து கொடுமை படுத்தி வந்ததுள்ளனர். அந்த வீட்டின் உரிமையாளர் சசி சிறுமியை தாக்கி, இரும்பு கம்பி உள்ளிட்டவைகளால் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். அத்தோடு, அவரது இரு மகன்களும் சிறுமியின் ஆடைகளை களைத்து, நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து, பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். மேலும் சிறுமியை கட்டி வைத்து, கைகளில் ஆசிட்டை ஊற்றி நடந்த சம்பவங்களை வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளனர். 

இந்த நிலையில் சிறுமியின் தாய், தனது உறவினருடன் நேராக அந்த வீட்டிற்கு வந்துபார்த்து சிறுமியை மீட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தனது மகளுக்கு நடந்த கொடுமைகளை போலீஸில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் சசி மற்றும் அவரது 2 மகன்கள் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

கடலூரில் 7 மையங்களில் இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Constable Second Level Written Exam in 7 centres in Cuddalore

இரண்டாம் நிலை காவலர் நேரடி தேர்வு 2023, (இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு துறை காவலர்) தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் மூலம் 3359 பணியிடங்களை நிரப்பிட எழுத்து தேர்வு கடலூர் மாவட்டத்தில் 1.செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி மஞ்சக்குப்பம் 2.செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மஞ்சகுப்பம், 3. கிருஷ்ணசாமி மெமோரியல் மேல்நிலைப்பள்ளி வில்வநகர், 4. பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தேவனாம்பட்டினம், 5. அரிஸ்டோ பப்ளிக் மேல்நிலைப்பள்ளி திருப்பாதிரிப்புலியூர், 6. சி.கே மேல்நிலைப்பள்ளி ஜட்ஜ் பங்களா ரோடு, 7. செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி கம்பியம்பேட்டை ஆகிய 7 தேர்வு மையங்களில் எழுத்து தேர்வு நடைபெற்றது. 

செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் விழுப்புரம் சரக துணை தலைவர் ஜியாவுல் ஹக் பார்வையிட்டார். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் உடன் இருந்தார்.