உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் ராகேஷ். இவர் அப்பகுதியில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார். அதே கல்லூரியில் அவருடன் படிப்பவர் அனிதா. இவர்கள் இருவரும் பள்ளிகாலத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளார்கள். எனவே தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அந்த பெண் அவரிடம் கூறியுள்ளார். நான் தனியாக தொழில் செய்து வெற்றி அடைந்த பிறகுதான் திருமணம் செய்வேன் என்று அவர் அந்த பெண்ணிடம் கூறியுள்ளார்.

Advertisment

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அவரிடம் எச்சரிக்கும் தொனியில் பேசியுள்ளார். அப்படியும் அவர் அந்த பெண்ணின் பேச்சை கேட்கவில்லை என்று கூறப்படுகின்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் நேற்று காலையில் அவரை கத்தியால் முகத்தில் குத்தியுள்ளார். தொடர்ச்சியாக 10க்கும் மேற்பட்ட இடங்களில் குத்தியுள்ளார். இனி உன்னை யார் காதலிப்பார்கள் என்று கூறியவாறே இந்த சம்பவத்தில் அவர் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.