ஒடிசா மாநிலம், சுந்தர்கர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது வீட்டிற்கு தொழிலாளி ஒருவர் அத்துமீறி நுழைந்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, அந்த பெண்ணின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அந்த தொழிலாளியை பிடித்தனர். அது மட்டுமல்லாமல், அவருடன் இருந்த 7 தொழிலாளர்களையும் பிடித்து சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதையடுத்து, அந்த தொழிலாளர்களின் ஆடைகளை அவிழ்த்து, கையை கயிற்றால் கட்டி, ஊர் முழுவதும் ஊர்வலமாக இழுத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், அங்கு சென்று தலையிட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த பெண்ணின் சமூகத்தினர், போலீசாரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, இரு தரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் தொழிலாளர் உள்பட 8 பேரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.