Skip to main content

ஜி-20; இரவு விருந்தில் புறக்கணிக்கப்பட்ட மல்லிகார்ஜுன கார்கே

Published on 09/09/2023 | Edited on 09/09/2023

 

G-20; Mallikarjuna Karke who was ignored at the dinner party

 

ஜி20 உறுப்பு நாடுகளாக அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியக் குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன. ஜி20 அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டில் உச்சி மாநாடு நடைபெறுவது வழக்கம்.

 

அந்த வகையில் இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஜி20 தொடர்புடைய மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்று வந்தன. இதனைத் தொடர்ந்து டெல்லியில் இன்றும், நாளையும் என இரு நாட்கள் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ஜெர்மன் அதிபர் பிராங் வால்டர் சென்மர், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் டெல்லி வந்துள்ளனர். 

 

இந்த நிலையில், இன்று இரவு ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் பிரதிநிதிகளுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இரவு உணவு விருந்து அளிக்கிறார். இந்த விருந்தில் கலந்து கொள்ள இருக்கும் வெளிநாட்டுத் தலைவர்களுக்குக் குடியரசுத் தலைவர் மாளிகையின் ராஷ்ட்ரபதி சார்பில் இரவு விருந்துக்கு கொடுக்கப்பட்ட அழைப்பிதழில் இந்திய ஜனாதிபதி (President Of India) என்பதற்குப் பதிலாக பாரதத்தின் ஜனாதிபதி (President Of Bharat) என இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து, இந்த விருந்தில், பங்கேற்க மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் மாநில அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

 

அதன்படி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விருந்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். மேலும், மம்தா பானர்ஜியும் இதில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவுக்கு குடியரசுத் தலைவரின் இரவு விருந்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்த தகவலை அவரது அலுவலகம் உறுதி செய்துள்ளது. இதற்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த இரவு விருந்தில், எதிர்க்கட்சித் தலைவர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. மேலும், அனைத்து அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் ஆகியோருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு கார்கே சரமாரி கேள்வி!

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
For Prime Minister Modi, Karke barrage of questions

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “பிரதமர் மோடி அறிவித்த ‘மேக் இன் இந்தியா’ என்ற திட்டம் படுதோல்வி அடைந்துவிட்டது. தொழில் உற்பத்தித் துறையில் அரசு அறிவித்த திட்டங்கள் அனைத்தும் முற்றிலும் செயலற்றுவிட்டது. 

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், உற்பத்தியால் சேர்க்கப்பட்ட மதிப்பு 16%லிருந்து 13% ஆக ஏன் குறைந்துள்ளது? மோடி அரசின் கீழ் உற்பத்தித் துறையின் சராசரி வளர்ச்சி ஏன் சரிந்தது? காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 7.85% ஆக இருந்தது. இப்போது, அது கிட்டத்தட்ட 6% ஆகக் குறைந்தது. மோடி அரசு 2022க்குள் உற்பத்தித் துறையில் 10 கோடி வேலைகளை வழங்குவதாக உறுதியளித்தது. அந்த வேலைகள் எங்கே? கடந்த 10 ஆண்டுகளில் உற்பத்தித் துறையில் தொழிலாளர் எண்ணிக்கை ஏன் குறைந்துள்ளது? உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தில் பெரும்பாலானவை செயல்படத் தவறியது ஏன்?

முக்கிய துறைகளுக்கான நிதியில் பாரிய அளவில் பயன்படுத்தப்படாதது ஏன்? ஜவுளித் துறையில் பிஎல்ஐக்கான 96% நிதி பயன்படுத்தப்படவில்லை. ஏ.சி.கள் மற்றும் எல்.இ.டி.யின் பாகங்கள் மற்றும் துணை பாகங்கள் தயாரிப்பதற்காக வெள்ளைப் பொருட்களில் பிஎல்ஐக்கான 95% நிதி பயன்படுத்தப்படாமல் உள்ளது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 549% ஆக இருந்த இந்தியாவின் ஏற்றுமதி விகிதம் மோடி ஆட்சியின் போது 90% ஆக சரிந்தது எப்படி? இந்தியாவிற்கு தேவையானது வலுவான மற்றும் உள்ளடக்கிய வேலை வாய்ப்பு உருவாக்கம் ஆகும். உயர் தொழில்நுட்ப நெட்வொர்க்குகளை இணைப்பதன் மூலம் வேலைகளை உருவாக்குபவர்களின் திறன்களை ஊக்குவிப்பது மற்றும் உற்பத்தியை ஒழுங்குபடுத்துவது அவசியம். உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிப்பதில் மதிப்பு கூட்டுதலில் கவனம் செலுத்த வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். 

Next Story

'இது மோடி, அமித்ஷாவின் சதிச் செயல்களுக்கு சிறு உதாரணமே' - மல்லிகார்ஜுன கார்கே

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
 'This is a small example of Modi and Amit Shah's conspiracies' - Mallikarjuna Kharge

அண்மையில் ‘சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்தவை ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல்’ என உச்சநீதிமன்றம் தனது கடும் கண்டனத்தை வெளிப்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தில், சண்டிகர் தேர்தலில் பாஜக வெற்றி செல்லாது என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

சண்டிகர் மாநகராட்சி மேயர், மூத்த மேயர், துணை மேயர் ஆகிய பதவிகளுக்கான வாக்குப்பதிவு, பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி கடந்த 30-01-24 அன்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில், இந்தியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து பா.ஜ.க.வை எதிர்த்துப் போட்டியிட்டன. அதன்படி, ஆம் ஆத்மியை சேர்ந்த குல்தீப் குமாரும், பா.ஜ.க.வை சேர்ந்த மனோஜ் சோங்கரும் மேயர் பதவிக்கு போட்டியிட்டனர். மேலும், மூத்த துணை மேயர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் குர்பிரீத் சிங்கும், பா.ஜ.க.வைச் சேர்ந்த குல்ஜீத் சந்தும் போட்டியிட்டனர். துணை மேயர் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளர் நிர்மலா தேவியை எதிர்த்து பா.ஜ.க சார்பில் ராஜிந்தர் சர்மா போட்டியிட்டார்.

30-01-24 அன்று காலை வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், பிற்பகல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் மொத்தமுள்ள 36 ஓட்டுகளில், 16 ஓட்டுகள் பெற்று பா.ஜ.க வேட்பாளர் மனோஜ் சோங்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும், இதில் ஆம் ஆத்மி மேயர் வேட்பாளர் குல்தீப் குமாருக்கு கிடைத்த 20 வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. இதனையடுத்து, பா.ஜ.க குறுக்கு வழியில் வெற்றி பெற்றதாக ஆம் ஆத்மி கடுமையாக விமர்சனம் செய்து குற்றம்சாட்டியது. இந்நிலையில் சண்டிகர் மேயர் தேர்தல் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வீடியோ ஆதாரங்களுடன் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் பல்வேறு கேள்விகளை உச்சநீதிமன்றம் எழுப்பியது. தொடர்ந்து எதிர்க்கட்சிகளும் தங்களது அதிருப்தியை தெரிவித்து வந்தன.

இன்று நடைபெற்ற விசாரணைக்குப் பின், சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது செல்லாது என அறிவித்துள்ள உச்சநீதிமன்றம், ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளது. 'தனது அதிகார வரம்பை மீறித் தேர்தல் நடத்தும் அதிகாரி தவறு செய்துள்ளார். நடந்த சண்டிகர் மேயர் தேர்தலில் 8 வாக்குகள் செல்லாது எனச் சொல்ல எந்த முகாந்திரமும் இல்லை. தேர்தல் அதிகாரி செய்த தில்லுமுல்லு நடவடிக்கைக்காக ஒட்டுமொத்த தேர்தலையும் ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை' எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 'This is a small example of Modi and Amit Shah's conspiracies' - Mallikarjuna Kharge

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வரவேற்று வருகின்றன. இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள காங்கிரஸின் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள கருத்தில், 'பாஜகவின் கோரப் பிடியிலிருந்து ஜனநாயகத்தை உச்சநீதிமன்றம் காப்பாற்றி உள்ளது. அரசியலமைப்புச் சட்டம் மீதான தாக்குதலுக்கு எதிராக இந்தியர்கள் அனைவரும் போராட வேண்டும். சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்த தில்லுமுல்லு என்பது மோடி, அமித்ஷாவின் சதிச் செயல்களுக்கு சிறு உதாரணமே' எனத் தெரிவித்துள்ளார்.