
தல அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். அதிகளவிலான ரசிகர்களை கொண்டிருப்பவர்களில் இவரும் ஒருவர். தமிழ்நாட்டில் மட்டும் இவருக்கு ரசிகர்கள் இல்லை, கர்நாடாகா மாநிலத்திலும் சரிக்கு சமமாக தல அஜித்திற்கு ரசிகர்கள் உண்டு. தல அஜித், தன்னுடைய ரசிகர்கள் தனக்காக எதையும் செய்து, அவர்களின் நேரத்தை, பணத்தை செலவு செய்ய வேண்டாம் என்று நினைப்பவர். அதற்காகவே ரசிகர் மன்றத்தை கூட கலைத்தவர். அப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று அஜித்தின் ரசிகர்கள், அஜித்தின் பெயரை சொல்லி எதாவது நல்ல விஷயங்களை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான கோலார் மாவட்டத்தில் இருக்கும் அஜித் நற்பணி மன்றத்தை சேர்ந்தவர்கள். புதுமையான ஒரு நலத்திட்டத்தை செய்திருக்கின்றனர். ஆட்டோ பின் கர்ப்பிணி பெண்களுக்கு இலவசம் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இவர்களோ கர்ப்பிணி பெண்களுக்கு என்றே அவசர உதவி செய்ய தனி வாகனத்தை கொண்டு வந்துள்ளனர். இது கோலாரில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் தெரியப்படுத்தும் விதத்தில், போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த ரசிகர்கள், இலவச கல்வி அளிப்பதாகவும் அந்த போஸ்டரில் தெரிவித்துள்ளனர். இந்த செய்தி சமூக வலைதளத்தில் இருக்கும் பல அஜித் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. இது அவர்களுக்கு பெருமையான ஒரு விஷயமும் கூட.