இந்திய அளவில் நான்காவது இடம் பிடித்த நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தை முதலமைச்சர் நாரயணசாமி ஆய்வு செய்து காவல்துறையினருக்கு பரிசுத்தொகை அறிவித்தார்
கடந்த 20- ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் புதுச்சேரியிலுள்ள நெட்டப்பாக்கம் காவல் நிலையம் இந்திய அளவில் நான்காவது இடம் பிடித்ததாக அறிவித்தது அரசு. மத்திய உள்துறை அமைச்சகம் CCTMS மூலம் குற்ற சம்பவங்கள் குறைவாகவும், குற்ற சம்பவங்களை தடுப்பதிலும், கண்டுபிடிப்பதிலும் எந்த காவல் நிலையம் சிறப்பாக செயல்படுகின்றது என்ற அடிப்படையில் நெட்டப்பாக்கம் காவல்நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது.
மேலும் சுகாதாரம், குடிநீர்வசதி, புகார் கொடுப்பவர்களிடம் அணுகுமுறை, பாதுகாப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்து இதனை தேர்வு செய்துள்ளனர்.
இந்நிலையில் முதலமைச்சர் நாராயணசாமி இன்று நெட்டப்பாக்கம் காவல் நிலையத்துக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு, அதிகரிகளுக்கு பாராட்டு தெரிவத்தார். தொடர்ந்து காவல்துறை அதிகாரிகளுக்கு குற்ற சம்பவங்களை தடுக்கவும் அறிவுரை கூறினார். தொடர்ந்து காவல் கண்காணிப்பாளருக்கு 35,000 ரூபாயும், ஆய்வாளருக்கு 30,000, உதவிஆய்வாளர்களுக்கு 25,000 துணை உதவி ஆய்வாளருக்கு 20,000, காவலருக்கு 5,000 ரூபாய்கள் என அனைவருக்கும் சன்மானம் அறிவித்துள்ளதாகவும் அதனை வரும் குடியரசு தினத்தன்று வழங்கப்படும் என்றும் நாராயணசாமி அறிவித்தார். அவருடன் சபாநாயகர் வைத்திலிங்கம், காவல் துறை இயக்குநர் சுந்தரி நந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.