four states election polls completed election commission of india

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நிறைவுபெற்றது. தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாகவும், அசாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாகவும் தேர்தல் நடந்தது. மேற்கு வங்க மாநிலத்தில் மூன்றாம் கட்டமாக 31 தொகுதிகளுக்கு நேற்று (06/04/2021) வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் நாட்களில் அடுத்தடுத்த வாக்குப்பதிவு ஐந்து கட்டங்களாக நடைபெறவுள்ளது.

Advertisment

அதைத் தொடர்ந்து, தமிழகம், அசாம், மேற்குவங்கம், புதுச்சேரி, கேரளா ஆகிய ஐந்து மாநிலங்களில் பதிவான வாக்குகள் மே 02- ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

Advertisment

இந்த நிலையில் நான்கு மாநிலங்களில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது தொடர்பாக இந்தியத் தேர்தல் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'தமிழகம், புதுச்சேரி, அசாம், கேரளா ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் மூன்றாம் கட்ட தேர்தலும் அமைதியான முறையில் நடைபெற்றது. 475 சட்டமன்றத் தொகுதிகளில் அமைக்கப்பட்ட 1.5 லட்சம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களித்தனர்' இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.