Published on 08/12/2024 | Edited on 08/12/2024
புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் எம்.டி.ஆர் ராமச்சந்திரன் (94) வயது மூப்பு காரணமாக இன்று (08-12-24) காலமானார்.
புதுச்சேரியைச் சேர்ந்த எம்.டி.ஆர் ராமச்சந்திரன், திமுக சார்பில் 2 முறை மாநில முதல்வராகப் பதவியேற்றார். இவர், 1980-1993ஆம் ஆண்டு வரையிலும், 1990-1991ஆம் ஆண்டு வரை என இரண்டு முறை திமுக சார்பில் முதல்வராக பணியாற்றினார்.
2001-2006 காலகட்டத்தில் சபாநாயகராக பணியாற்றினார். தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த, எம்.டி.ஆர் ராமச்சந்திரன் வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.