Skip to main content

கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் காலமானார்

Published on 10/12/2024 | Edited on 10/12/2024
Former Chief Minister of Karnataka S.M.Krishna passed away

கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், மத்திய அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா(92) இன்று(10-12-24) பெங்களூருவில் காலமானார். 

கடந்த 1999ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை எஸ்.எம்.கிருஷ்ணா கர்நாடகா முதல்வராக பதவி வகித்தார். இதனையடுத்து, கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை மகராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநராக பொறுப்பு வகித்தார். 2009 முதல் 2012ஆம் ஆண்டு வரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். 

கடந்த 1989 முதல் 1993 வரை கர்நாடகா சட்டப்பேரவையின் சபாநாயகராகவும், 1971ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை பலமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்து வந்துள்ளார். வயது மூப்பு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற எஸ்.எம்.கிருஷ்ணா, உடல்நலக்குறைவால் பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார். இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான பத்ம் விபூஷன் வருது அவருக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்