ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர்ஃபரூக் அப்துல்லா. தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரான இவர், ஜம்மு காஷ்மீரின் முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். 83 வயதான ஃபரூக் அப்துல்லாவிற்கு மார்ச் மாத இறுதியில் கரோனா உறுதியானது.
அதனைத் தொடர்ந்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட அவர், பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று சமீபத்தில் வீடு திரும்பினார். இந்தநிலையில், அவரது மகனுக்கும், காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லாவிற்கும் தற்போது கரோனா உறுதியாகியுள்ளது.
இதனைதனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளஅவர், மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும், தனக்கு கரோனா அறிகுறிகள் இல்லையென்றும், உடலின் பல்வேறு அளவுகோல்களை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.