தாய்லாந்தில் இரண்டு நாட்களாக சேற்றுக்குள் சிக்கி போராடிவந்த 6 யானை குட்டிகளை அந்நாட்டு வனத்துறை வீரர்கள் போராடி மீட்டனர். அப்போது கடைசியாக மீட்கப்பட்ட யானை குட்டி வனத்துறை வீரர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் திரும்பி பார்த்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தாய்லாந்தின் பாங்காங்கின் கிழக்கு பகுதியில் வனத்தின் மையப்பகுதியில் உள்ள சேறு நிறைந்த குட்டையில் 1 முதல் 4 வயதுள்ள 6 யானைக்குட்டிகள் கடந்த இரண்டு நாட்களாக சிக்கி தவித்து வந்த நிலையில் வனத்துறையினர் வியாழன் கிழமை காலை முதல் களத்தில் இறங்கி போராடி மீட்டனர்.

சுமார் இரண்டு நாட்களாக சேற்றில் சிக்கியபடி இருந்த அந்த குட்டி யானைகள் சேற்றுக்குமேல் துதிக்கையை தூக்கியபடி இருந்ததால் சேற்று குட்டையில் இருந்து ஏற்றப்பட்டதும் காட்டை நோக்கி ஓட்டம் பிடித்தன ஆனால் அந்த 6 யானைகளில் இறுதியாக ஏறிய யானை அங்கு கூடியிருந்த வனத்துறையினரை நன்றி தெரிவிக்கும் வகையில் துதிக்கையை தூக்கிவிட்டு பின்னர் காட்டிற்குள் சென்றது.

அந்த குட்டி யானையின் அந்த செயல் அங்கு கூடியிருந்த வனத்துறையினர் மாற்றும் மக்கள் இடையே ஆரவாரத்தையும் ஒரு வித நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.