குஜராத் மாநிலத்தில் உள்ள ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் ஆலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 750 கோடி ரூபாய்க்கு வாங்க முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது.
குஜராத் மாநிலம், சனந்த் நகரில் செயல்பட்டு வந்த ஃபோர்டு தொழிற்சாலை மூடப்பட்டது. இதனையடுத்து, டாடா நிறுவனம், பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், ஆலையை வாங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சமீபத்தில் ஏற்கப்பட்டது.
ஆலையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு அளிக்கவும், டாடா மோட்டார்ஸ் முன்வந்துள்ளது.
ஏற்கனவே, சென்னையை அடுத்த மறைமலை நகரில் செயல்பட்டு வந்த ஃபோர்டு ஆலையின் கார் உற்பத்தியை அந்நிறுவனம் நிறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கார் விற்பனை குறைவு உள்ளிட்ட காரணங்கள் இந்தியாவில் குஜராத் மற்றும் சென்னை ஆலையில் உற்பத்தியை முற்றிலுமாக ஃபோர்டு நிறுவனம் நிறுத்தியுள்ளது.