Published on 12/07/2022 | Edited on 12/07/2022

புதுச்சேரி மாநிலம் எனாம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது கடந்த சில தினங்களாகவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் பரவலாக மழை பொழிந்துவந்த நிலையில் சில கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இந்தநிலையில் புதுச்சேரி ஏனாம் பிராந்தியத்தில் உள்ள 14 மீனவர் கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கோதாவரி ஆற்றுப்படுகையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.