Skip to main content

சிறுத்தையைக் கொன்று சாப்பிட்ட ஐவர் கைது! - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

Published on 23/01/2021 | Edited on 23/01/2021

 

leopard meat

 

கேரளா மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில், சிறுத்தையை சமைத்துச் சாப்பிடப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அம்மாநில வனத்துறையினர் ரெய்டில் ஈடுபட்டனர். அந்த ரெய்டில், 6 வயதான சிறுத்தை ஒன்றை வேட்டையாடி சமைத்துச் சாப்பிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

முதலில் சிறுத்தை எதிர்பாராத விதமாக வலையில் சிக்கியதாகவே வனத்துறையினர் கருதியுள்ளனர். ஆனால் அதனைக் கொன்று சாப்பிட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தங்களது கால்நடைகளை வேட்டையாடி உண்ட சிறுத்தையை, அவர்கள் திட்டமிட்டு பிடித்திருப்பது தெரியவந்தது. மேலும் வனத்துறையினர், இதுகுறித்து பிரத்தியேகமான விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

 

சிறுத்தையைக் கொன்று சாப்பிட்டவர்களுக்கு ஏழாண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் எனக் கூறியுள்ள வனத்துறையினர், 10 கிலோ சிறுத்தையின் இறைச்சி, தோல், பற்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர். கொல்லப்பட்ட சிறுத்தையின் எடை 50 கிலோ இருக்கும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், 10 கிலோ இறைச்சி மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

வனத்துறையினருக்கு மட்டுமில்லாமல், மக்களுக்கும் இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்!

Published on 24/07/2024 | Edited on 24/07/2024
Cauvery Management Commission meeting in Delhi

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 99வது கூட்டம் காணொளி காட்சி வாயிலாக கடந்த 11 ஆம் தேதி (11.07.2024) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், “தமிழகத்திற்கு ஜூலை 12 ஆம் தேதி (12.07.2024) முதல் வரும் 31ஆம் தேதி (31.07.2024) வரை நாள்தோறும் 1 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும்” எனக் கர்நாடகாவுக்கு பரிந்துரை செய்திருந்தது. மேலும் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு செல்லும் நீரின் அளவு 1 டிஎம்சியாக இருப்பதைக் கர்நாடக அரசு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை ஜூலை முதல் வாரத்தில் தொடங்கி தற்போது வரை விட்டு விட்டு கனமழை பொழிந்து வருகிறது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான மைசூர், குடகு, ஹாசன் உள்ளிட்ட பகுதிகளிலும் கடலோர மற்றும் மலை மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பொழிவதால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் தொடர்ந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 32வது கூட்டம் இன்று (24.07.2024) பிற்பகல் 02.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமை தாங்குகிறார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 

Next Story

தாளவாடி அருகே சிறுத்தை தாக்கி 2 ஆடுகள் பலி

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
2 goats attacked in leopard attack near Thalavadi

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன இதில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.தாளவாடி  வனச்சரகத்தில் உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை, மற்றும் புலிகள்  அவ்வப்போது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு , காவல் நாய்களை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில்  தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட ராமபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜமீல் ஷெரீப், 5 ஆடுகளை வழக்கம்போல தனது நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். நேற்று மாலை  ஆட்டை பிடிக்கச் சென்றபோது தனது 2 ஆடுகள் கடிபட்டு இறந்து கிடந்தது. இதுபற்றி தாளவாடி வனத்துறையினர் தகவலளித்தார் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை இறந்த  ஆடுகளை ஆய்வு செய்தனர் அப்போது வனப்பகுதியில்  இருந்து வெளியேறிய சிறுத்தை ஆடுகளை கடித்துக் கொன்றது  தெரியவந்தது. சிறுத்தை ஆடுகளை கடித்து கொன்ற சம்பாதித்தால் அவர் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.