Skip to main content

முதுகை படிக்கட்டாக மாற்றி உதவிய மீனவர் ஜெய்சலுக்கு கார் - வீடு பரிசு!

Published on 15/09/2018 | Edited on 15/09/2018
kerala

 

முதுகை படிக்கட்டாக மாற்றி உதவிய மீனவர் ஜெய்சலின்  மீட்பு பணியை பாராட்டி மகேந்திரா நிறுவனத்தின் சார்பில் கார் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது.   இதைத்தொடர்ந்து தற்போது இஸ்லாமிய அமைப்பு ஒன்று அவருக்கு வீடு ஒன்றை பரிசாக வழங்கியுள்ளது.

 


கேரளாவின் வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கியோரை மீட்பு பணி நடந்து கொண்டிருந்தபோது,  ஜெய்சல் என்ற மீனவர் மீட்புப் படையினருடன் சேர்ந்து வெள்ளத்தில் சிக்கிய முதியவர்கள், பெண்கள், குழந்தைகளை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.  அப்போது பெண்கள், முதியவர்கள் மீட்பு படகில் ஏறுவதற்கு சிரமப்பட்டனர். இதையடுத்து ஜெய்சல் படகிற்கு பக்கத்தில் படுத்து கொண்டு தனது முதுகை படிக்கட்டாக மாற்றி பெண்களை தனது முதுகின் மேல் ஏறி படகிற்கு செல்லுமாறு கூறினார்.

 
ஆனாலும் ஜெய்சலின் முதுகில் ஏறிச்செல்ல பெண்கள் தயங்கி நின்றபோது, பரவாயில்லை...சும்மா ஏறுங்கள் என்று சொல்லி அவர்களை படகில் ஏற்றினார். ஜெய்சலின் இத்தகையை செயலைக்கண்டு உலகம் முழுவதிலும்  இருந்து பாராட்டுக்கள் வந்த வண்ணம் இருந்தன. ஜெய்சலின்  மீட்பு பணியை பாராட்டி மகேந்திரா நிறுவனத்தின் சார்பில் கார் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது.   இதைத்தொடர்ந்து தற்போது இஸ்லாமிய அமைப்பு ஒன்று அவருக்கு வீடு ஒன்றை பரிசாக வழங்கியுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்