Fire accident in shopping mall at west bengal

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் அக்ரோபோலிஸ் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. 21 மாடிகளைக்கொண்ட இந்த வணிக வளாகத்தில் தினந்தோறும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், இன்று மதியம் 3வது மாடியில் திடீரென்று தீ பற்றி எரிந்துள்ளது.

Advertisment

புத்தகக் கடையில் பற்றி எரிந்த தீ, அதன் பின்னர் மற்ற கடைகளுக்கும் பரவதொடங்கியுள்ளது. இதனைக் கண்ட வணிக வளாகத்தில் இருந்த அனைவரும் பத்திரமாக வெளியேறினர். மேலும், இந்தத்தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்த வந்த வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Advertisment

பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, தீயணைப்பு துறையினர், தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தத்தீ விபத்து சம்பவத்தில் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், இந்தத்தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.