/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/POLICE3333.jpg)
திரையரங்கு ஊழியர் மீது தாக்குதல் நடத்தியதாக, அவரது நண்பர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலம், திருவள்ளுவர் சாலையில் உள்ள திரையரங்கில் ரஞ்சித் என்ற இளைஞர் பணிபுரிந்து வந்தார். பணியில் இருந்த அவரை தனியே அழைத்துப் பேசிய அவரது நண்பர்கள், திடீரென கத்தி மற்றும் கைகளால் தாக்கியுள்ளனர். இதனால் திரையரங்கு வளாகத்தில் பதற்றம் ஏற்பட்டது.
அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த காவலர்கள், தாக்குதல் நடத்திய இரண்டு பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், திருட்டு வழக்கில் ஏற்கனவே, இருவரும் கைதாகி சிறைசென்று வந்தது தெரிய வந்தது. அதை வைத்து ரஞ்சித் கிண்டல் செய்ததால், அவரை அச்சுறுத்துவதற்காகத் தாக்கியது தெரிய வந்தது.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)