Published on 01/07/2022 | Edited on 01/07/2022
தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த மே மாதத்தில் மட்டும் 107 டன் தங்கம் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில், இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் தங்கத்தை அளவைக் குறைக்கும் வகையிலும், ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதைத் தடுக்கவும் மத்திய அரசு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கான இறக்குமதி வரியை 10.75%- லிருந்து 15% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால், இந்தியாவில் தங்கத்தின் விலை மேலும் உயரக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றன. அதேபோல், மத்திய அரசின் அறிவிப்பு பெண்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.