Published on 19/11/2021 | Edited on 19/11/2021

மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி, விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தநிலையில் பிரதமர் மோடி, இன்று (19.11.2021) வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.
மேலும் டெல்லியில் போராடும் விவசாயிகள், தங்களது போராட்டத்தைக் கைவிட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். இந்தநிலையில், விவசாய சங்கத் தலைவர்களில் ஒருவரான ராகேஷ் திகைத், விவசாயிகளின் போராட்டம் திரும்பப் பெறப்படாது என அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "போராட்டம் திரும்பப் பெறப்படாது. நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் இரத்து செய்யப்படும் நாளுக்காக நாங்கள் காத்திருப்போம். குறைந்தபட்ச ஆதார விலையைத் தவிர, விவசாயிகளின் மற்ற பிரச்சனைகள் குறித்தும் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என கூறியுள்ளார்.