Skip to main content

'மாப்பிள்ளையும் இல்லை! மணப்பெண்ணும் இல்லை!'... செல்போனில் நடந்த நிச்சயதார்த்தம்... வாயடைத்துப் போய் நிற்கும் நெட்டிசன்கள்...!(வீடியோ)

Published on 13/02/2020 | Edited on 13/02/2020

முன்பு திருமணம் என்றால் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இணைந்து மணமகளை கூட்டிக்கொண்டு மணமகள் வீட்டிற்கு செல்வார்கள். அங்கு மணமகள் தலைகுனிந்தவாறு  தட்டில் காப்பியை கொண்டு வந்து மணமகன் மற்றும் உறவினர்களுக்கு தருவார். புகைபடத்தில் மட்டுமே பார்த்த மணமகளின் முகத்தை நேரில் காண வேண்டும் என்று மணமகன் ஏங்கித் தவிப்பான். ஆனால் அவளோ தலைகுனிந்த படியே வீட்டிற்குள் சென்று விடுவாள். இருவீட்டாரும் பேசி முடித்துவிட்டு புறப்பட்டு விடுவார்கள்.

 

engagement on cellphone

 பின்னர் மணமகன் தனது வாழ்கை துணைவியாக வரயிருப்பவளை எப்படியாவது கண்டுவிட வேண்டும் என்று, இரண்டுநாள்கள் கழித்து எதாவது ஒரு காரணத்தைக் கூறி மணமகள் வீட்டிற்கு செல்வான். ஆனால் அங்கு மாமனார் மட்டுமே பேசி முடித்து அவனை வீட்டிற்கு வழி அனுப்பி விட்டுவிடுவார். இதையடுத்து திருமணத்தில்தான் மணமகன், மணமகள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வார்கள். இப்படிப்பட்ட பல சுவாரஸ்யமான நிகழ்வுகளுடன்தான் பல ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

 


ஆனால் தற்போது செல்போன் மூலம் ஒரு தம்பதி நிச்சயதார்த்தம் செய்து கொண்ட சம்பவம் நெட்டிசன்களை உச் கொட்ட வைத்திருக்கிறது. நிஜத்தில் எப்படி நிச்சயதார்த்தம் நடைப்பெறுமோ அதேப்போல தம்பதியினர் வீடியோ காலில் இருக்க அவரது குடும்பத்தினர் ஆடை, அணிகலன்களை போனின் முன்பு வைத்து நிச்சயம் செய்யும் காட்சி சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகின்றது. 
 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஆவடியில் இரட்டைக் கொலை; போலீசாரிடம் சிக்கிய செல்போன்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
aavadi siddha doctor and his wife incident Cell phone caught by the police

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்துள்ள மிட்டனமல்லியில் சித்த மருத்துவர் சிவன் நாயர் என்பவரும், அவரது மனைவி பிரசன்னகுமாரி ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இத்தகைய சூழலில் அவரது இல்லத்திற்கு சிகிச்சைக்கு வருவதுபோல் நேற்று (28.04.2024) இரவு வீட்டிற்குள் மர்ம நபர்கள் நுழைந்துள்ளனர். அதன்பின்னர் சித்த மருத்துவர் சிவன் நாயரையும் அவரது மனைவி பிரசன்னகுமாரியையும் மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாராணை மேற்கொண்டனர். அப்போது இந்த இரட்டைக் கொலை நடந்த இடத்தில் செல்போன் ஒன்று கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மகேஷ் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதோடு கொலையான மருத்துவரிடம் சிகிச்சை பெற வந்தவர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் கொலையாளிகள் பல லட்சம் மதிப்பிலான தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனரா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆவடி அருகே சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவி கழுத்து அறுத்து கொடூரக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

அதிதி ராவுடன் திருமணமா? - புகைப்படத்துடன் தெளிவுபடுத்திய சித்தார்த்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
siddharth calrifies on his marrige news to aditi rao

நடிகர், தயாரிப்பாளர் என இரண்டு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார் சித்தார்த். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான சித்தா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இதனிடையே காற்று வெளியிடை மூலமாக அறிமுகமாகி செக்க சிவந்த வானம், சைக்கோ உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமான நடிகை அதிதி ராவ்வை சித்தார்த் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இருவரும் 2021 ஆம் ஆண்டு மகா சமுத்திரம் எனும் தெலுங்கு படத்தில் இணைந்து நடித்திருந்த நிலையில், இருவருக்கும் காதல் மலர்ந்ததாகச் சொல்லப்படுகிறது. 

இதை உறுதிப்படுத்தும் வகையில் இரண்டு பேரும் தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்து வந்தனர். ஆனால் வெளிப்படையாக காதலை இதுவரை அறிவிக்காமல் இருந்தனர். இந்த நிலையில், இருவரும் நேற்று தெலங்கானாவில் உள்ள ஸ்ரீ ரங்கநாயக ஸ்வாமி கோயிலில் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது. ஆனால் சித்தார்த் - அதிதி ராவ் தரப்பு எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தது.  

siddharth calrifies on his marrige news to aditi rao

இந்த நிலையில் சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அதிதி ராவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, “அவள் ஒப்புக்கொண்டாள். நிச்சயதார்த்தம் நடைபெற்றது” எனக் குறிப்பிட்டுள்ளார். அதனால் இருவருக்கும் நிச்சயம் முடிக்கப்பட்ட நிலையில் விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பை அவர்கள் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சித்தார்த், 2003 ஆம் ஆண்டு மேக்னா என்பவரைத் திருமணம் செய்து கொண்டு 2007ல் விவாகரத்து பெற்றுக் கொண்டார். அதிதி ராவும் சத்யதீப் மிஸ்ரா என்ற பாலிவுட் நடிகரை திருமணம் செய்துகொண்டு 2013 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.