பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பிரச்சாரங்களை நேரடியாக ஒளிபரப்ப நமோ டிவி எனும் 24 மணி சேனல் மார்ச் 31-ம் தேதி தொடங்கப்பட்டது. மக்களவை தேர்தல் வரை அவரது பிரச்சாரங்கள்அனைத்தும் இதில் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளன. இந்த தொலைக்காட்சி லோகோவில் பிரதமர் மோடியின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.
இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயல் என காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மீ காட்சிகள் தேர்தலை ஆணையத்தில் புகார் அளித்தன. இதனை தொடர்ந்து தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மற்றும் தூர்தர்ஷனுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் நமோ தொலைக்காட்சிக்கு அனுமதியளிக்கப்பட்டது மற்றும் ஒளிபரப்பை தொடங்கியது தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.