இந்தியாவின் வட மேற்கு பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இன்று இரவு 7.30 மணி அளவில் உத்தகாண்டில் சமோலி பகுதியில் மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகியுள்ளது.

Advertisment

இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலைக்கு வந்தனர். சில மணி நேர இடைவெளிக்கு பிறகு அவர்கள் மீண்டும் வீடுகளுக்கு சென்றனர்.இந்ந நிலநடுக்கத்தால் உயிர் சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. நிலநடுக்க பாதிப்புகளை ஆய்வு செய்து வருவதாக அம்மாநில அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.