Published on 01/03/2019 | Edited on 01/03/2019
மகாராஷ்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 4.3 ஆக பதிவாகி உள்ளது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.
இதே பால்கர் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி தொடர்ந்து 3 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் கட்டிடங்களில் அதிர்வு ஏற்பட்டது. அச்சம் அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி திறந்த வெளியில் தஞ்சம் புகுந்தனர். தற்போது மீண்டும் அந்த பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்த பகுதியில் மக்கள் பீதியடைந்துள்ளனர்.