Skip to main content

திடீர் நிலநடுக்கம்... அச்சத்தில் உறைந்த ஜம்மு காஷ்மீர் மக்கள்!

Published on 05/02/2022 | Edited on 05/02/2022

 

 Earthquake in Jammu and Kashmir Earthquake in Kashmir

 

ஜம்மு-கஷ்மீரில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக மக்கள் அச்சத்தில் உள்ளனர். உணரப்பட்ட நிலநடுக்கமானது 5.7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆப்கானிஸ்தான் கஜிகிஸ்தான் எல்லையை மையமாகக் கொண்ட இடத்தில் இன்று காலை சுமார் 9.45 மணி அளவில் இந்த நிலநடுக்கமானது ஏற்பட்டது. இதனால் வீடுகள் லேசாக அதிர்ந்தது. இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்து வீதிகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ பொருட் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் எந்த தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும் திடீரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநரிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பையும், நிலவரத்தையும் கேட்டறிந்தார்.

 

 

சார்ந்த செய்திகள்