Skip to main content

ஓட்டுநர்கள் போராட்டம்; பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Drivers struggle; Central government calls for talks

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகிய 3 குற்றவியல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த சட்டங்கள்தான் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி வரை அமலில் இருந்தன. இதற்கிடையே, இவற்றுக்கு மாற்றாக 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு உருவாக்கியது. அதன்படி, நாடாளுமனற கூட்டத்தொடரில் 3 குற்றவியல் மசோதாக்கள் இந்தியில் மாற்றப்பட்டு தாக்கல் செய்யப்பட்டன. அதில், இந்திய தண்டனைச் சட்டம் என்பதை பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் எனவும், குற்றவியல் நடைமுறை சட்டம் என்பதை பாரதிய நாகரிக் சுரக்‌ஷ சன்ஹிதா எனவும், இந்திய சாட்சியங்கள் சட்டம் என்பதை பாரதிய சாக்சியா எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்ட 3 மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த மசோதாக்கள் மீதான விவாதம் கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி (20-12-2023) நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதையடுத்து, மக்களவையில் 3 புதிய குற்றவியல் மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து இந்த 3 குற்றவியல் மசோதாக்களும் மாநிலங்களவையிலும் கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த 3 புதிய குற்றவியல் மசோதாக்களும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதல் அளித்திருந்தார். இதனையடுத்து 3 புதிய குற்றவியல் மசோதாக்களும் கடந்த 25 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.

அதே சமயம் பாரத நியாய சன்ஹிதா என்ற பெயரில் புதிதாக கொண்டு வரப்பட்ட புதிய குற்றவியல் சட்டத்தில் விபத்தால் மரணம் ஏற்பட்டால் இந்த புதிய சட்டத்தால் ஓட்டுநர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வழிவகை செய்யபட்டுள்ளது. விபத்து தொடர்பான இந்த விதிமுறைக்கு ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்து மஹாராஷ்ட்ரா, பஞ்சாப், பிகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் லாரி ஒட்டுநர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் அத்தியாவசியப் பொருட்கள் சேவை தடை பெற்றுள்ளது. இந்நிலையில் புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் லாரி ஒட்டுநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் இன்று இரவு 7 மணியளவில் மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என கூறப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“நீட் தேர்வை ஆதரிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்” - முதல்வர் வலியுறுத்தல்!

Published on 16/06/2024 | Edited on 16/06/2024
Central govt should stop supporting NEET CM insists 

இளநிலை மருத்து படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன. இத்தகைய சூழலில் தான் குஜராத் மாநிலம் கோத்ராவில் உள்ள ஒரு மையத்தில் நடைபெற்ற தேர்வில் முறைகேடு செய்ததாகக் கூறி பயிற்சி மையத்தின் தலைவர் உட்பட 5 பேரை குஜராத் போலீஸார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான ஆங்கில செய்தியைக் குறிப்பிட்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நீட் தேர்வு தொடர்பாகச் சர்ச்சைகள் அதன் அடிப்படையில் சமத்துவமின்மை தன்மையை எடுத்துக்காட்டுகின்றன. பல்லாயிரம் ஆண்டுகளாகக் கல்வி மறுக்கப்பட்டு வரும் சமுதாயத்தில், ஒடுக்கப்பட்டோர் முன்னேற்றத்திற்கு அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும். மாறாக, அத்தகைய மாணவர்களின் வாய்ப்பை நீட் தேர்வு தடுக்கிறது. தேசிய தேர்வு முகமைக்கு (NTA) மத்திய கல்வி அமைச்சர் ஆதரவு தெரிவித்த போதிலும், சமீபத்திய நிகழ்வுகள் தேசிய தேர்வு முகமை வித்தியாசமான முகத்தைக் காட்டுகின்றன. 

Central govt should stop supporting NEET CM insists 

பல கோடி ரூபாய் மதிப்பிலான காசோலைகள் மற்றும் எட்டு வெற்று காசோலைகளை உள்ளடக்கிய பணப் பலன்களுக்காக ஓ.எம்.ஆர். தாள்களைத் தேர்வு கண்காணிப்பாளர்கள் திருத்தியதாக குஜராத் காவல்துறை முதல் தகவல் அறிக்கைகை (எஃப்ஐஆர்) பதிவு செய்துள்ளது. பள்ளியின் முதல்வர், இயற்பியல் ஆசிரியர் மற்றும் பல நீட் பயிற்சி மையங்கள் சம்பந்தப்பட்ட இந்த சதி, நீட் தேர்வு தொடர்பாக முறையான மாற்றத்திற்கான அவசரத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

மாணவி அனிதா முதல் எண்ணற்ற மாணவர்கள் வரை பரிதாபகரமாகத் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டதை நாம் நேரில் பார்த்திருக்கிறோம். தகுதியின் அளவுகோலாகக் கருதப்படும் நீட் தேர்வு, சமூகத்தின் அனைத்து மட்டங்களையும் பாதிக்கும் ஒரு பரவலான மோசடியாக மீண்டும் மீண்டும் தன்னை வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாணவர் விரோத, சமூக நீதிக்கு எதிரான, ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் குவைத் பயணம்!

Published on 12/06/2024 | Edited on 12/06/2024
Union Minister of State for External Affairs Kuwait visit

குவைத் நாட்டில் மங்காப் என்ற பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் இன்று (12.06.2024) பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மலையாள மக்கள் அதிகம் வசிக்கும் இடத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் தமிழர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் ஏற்பட்ட மீட்புப் பணிகள் நடைபெற்றன. அதே சமயம் தீ விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “குவைத் நகரில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். தீ விபத்தில் சிக்கி காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இந்தியத் தூதரகம் அங்குள்ள அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார். 

Union Minister of State for External Affairs Kuwait visit

இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்திவர்தன் சிங் குவைத் பயணம் மேற்கொள்ள உள்ளார். குவைத் தீ விபத்தில் காயமடைந்த இந்தியர்களுக்குத் தேவையான உதவிகளை மேற்கொள்ளவும், இறந்தவர்களின் உடல்களைச் சொந்த ஊருக்கு அனுப்பத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கீர்த்திவர்தன் சிங் குவைத் பயணம் மேற்கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய இணையமைச்சர் அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் கூறுகையில், “பிரதமர் மோடி எங்களை  ஒரு கூட்டத்திற்கு அழைத்துள்ளார். இக்கூட்டத்திற்குப் பிறகு நாங்கள் குவைத் நாட்டிற்குச் செல்வோம். இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.