தேர்தல் விளம்பரங்களில் ராணுவ வீரர்களின் புகைப்படங்கள் பயன்படுத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அனைத்துக்கட்சி தலைவர்கள் மற்றும் பொதுச்செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.
முன்னதாக புல்வாமா தாக்குதலை அடுத்து, இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் மற்றும் புல்வாமா தாக்குதலில் இறந்த வீரர்களின் புகைப்படங்களை வைத்தும் சில கட்சிகள் தங்களுக்கு ஏற்றார் போல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தேர்தல் ஆணையம் அனைத்துக்கட்சிகளுக்கும் ராணுவ வீரர்களை வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று கடிதம் அனுப்பியுள்ளது.
மேலும் அந்த கடிதத்தில் 2013ஆம் ஆண்டு கடிதத்தை சுட்டிக்காட்டி கட்சி தலைவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 2013ஆண்டிலேயே தேர்தல் பிரச்சாரத்தில் ராணுவ வீரர்களை வைத்து விளம்பரம் செய்யக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.