மூத்த இயக்குநர்களில் ஒருவரான கே. விஸ்வநாத் வயது முதிர்வு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 92.
1965 ஆம் ஆண்டில் அறிமுகமான கே.விஸ்வநாத் தான் இயக்கிய முதல் படமான ‘ஆத்ம கவுரவம்’ படத்திற்கு சிறந்த இயக்குநருக்கான நந்தி விருதை வென்றார். தொடர்ந்து தமிழிலும் சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். மேலும் தமிழில் யாரடி நீ மோகினி, ராஜபாட்டை, லிங்கா, உத்தம வில்லன் எனப் பல திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
மேலும் 5 தேசிய விருதுகள், 7 நந்தி விருதுகள், 10 மாநில விருதுகள் போன்ற பல்வேறு விருதுகளையும் வாங்கியுள்ளார். 2017 ஆம் ஆண்டு இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதையும் பெற்றுள்ளார். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக கடந்த சில மாதங்களாகவே சினிமாவில் இருந்து விலகி ஐதராபாத் இல்லத்தில் ஓய்வில் இருந்த விஸ்வநாத் நேற்று நள்ளிரவில் மரணமடைந்தார். அவரின் மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.