Skip to main content

"வளர்ச்சியே நமது மதம்!" - பிரதமர் மோடி!

Published on 19/02/2021 | Edited on 19/02/2021

 

pm modi

 

பிரதமர் நரேந்திர மோடி, கேரளாவில் இன்று பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை, காணொலி மூலமாகத் தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர், இந்தியா நீலப் பொருளாதாரத்தில் முதலீடு செய்து வருவதாகவும், விவசாயிகளை சூரிய சக்தி துறையுடன் இணைப்பதற்கான பணிகள் நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடக்க விழாவில் பிரதமர் மோடி ஆற்றிய உரை வருமாறு;

 

சூரிய சக்திக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. சூரிய சக்தியில் நமக்குக் கிடைக்கும் பலன்கள், காலநிலை மாற்றத்திற்கு எதிரான வலுவான போராட்டத்தையும், நமது தொழில் முனைவோருக்கு ஊக்கத்தையும் உறுதி செய்கின்றன. கடினமான உழைப்பாளிகளான நமது விவசாயிகளை, சூரியசக்தித் துறையுடன் இணைத்து அன்னமிடுபவர்களை, ஆற்றல் அளிப்பவர்களாகவும் உருவாக்குவதற்கும் பணிநடந்து வருகின்றன.

 

இந்தியா நீலப் பொருளாதாரத்தில் (நீர் சார் பொருளாதாரம்) முதலீடு செய்து வருகிறது. நமது மீனவர்களின் முயற்சிகளை நாம் மதிக்கிறோம். மீனவர் சமூகத்திற்கான எங்கள் முயற்சிகள் அதிக கடன், அதிகரித்த தொழில்நுட்பம், உயர்தர உள்கட்டமைப்பு மற்றும் ஆதரவான அரசாங்கக் கொள்கைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. மீனவர்களுக்கும் உழவர் கடன் அட்டை கிடைக்கிறது.

 

வளர்ச்சிக்கும் நல்லாட்சிக்கும் சாதி, மதம், இனம், பாலினம், மொழி ஆகியவை தெரியாது. வளர்ச்சி என்பது அனைவருக்குமானது. வளர்ச்சி நமது நோக்கம், வளர்ச்சியே நமது மதம். இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்