gfcg

Advertisment

உத்திரபிரதேச மாநிலத்தில் ஆதரவற்றோருக்கு வழங்கப்படும் பென்ஷன் தொகை இந்த மாதம் முதல் உயர்த்தி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இதுவரை உத்திரபிரதேச மாநிலத்தில் ஆதரவற்ற பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு மாதம் தோறும் 400 ரூபாய் பென்ஷனாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வரும் மாதம் முதல் மேலும் 100 ரூபாய் அதிகரித்து இனி மாதம் 500 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை இன்று காலை உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.