
வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தப் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தெலங்கானா, ஆந்திரா, மஹாராஷ்ட்ரா, சத்தீஷ்கரில் அதீத கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அந்தந்த மாநிலங்கள் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.