Skip to main content

“விவசாயிகளுக்கு அனுமதி மறுப்பு” - ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு!

Published on 24/07/2024 | Edited on 24/07/2024
Denial of permission to farmers Rahul Gandhi sensational accusation

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் (22.07.2024) தொடங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை மொத்தம் 19 அமர்வுகளுடன் நடைபெறவுள்ளது. இதன் ஒரு பகுதியாக 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (23.07.2024) காலை 11 மணிக்கு தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார். அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி இருந்தன. அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பட்ஜெட் மீதான விவதாம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் தன்னை சந்திக்க வந்த விவசாயிகளை உள்ளே அனுமதிக்கவில்லை என காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி கூறுகையில், “காங்கிரஸ் எம்பியும், மக்களவை மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி, "நாங்கள் விவசாயிகளை சந்திக்க நாடாளுமன்றத்திற்கு அழைத்தோம். ஆனால் அவர்களை நாடாளுமன்றத்தில் அனுமதிக்கவில்லை. அவர்கள் விவசாயிகள் என்பதால் உள்ளே அனுமதிப்பதில்லை என்பதே காரணமாக இருக்கலாம்” எனத் தெரிவித்திருந்தார்.

Denial of permission to farmers Rahul Gandhi sensational accusation

இதனையடுத்து ராகுல் காந்தியால் நாடாளுமன்றத்தில் தன்னை சந்திக்க அழைப்பு விடுக்கப்பட்ட விவசாயிகள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் அவரை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து நாடு முழுவதிலும் இருந்து 12 விவசாயத் தலைவர்கள் அடங்கிய குழு இன்று (24.07.2024) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினர். அப்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் கே.சி.வேணுகோபால், அமரீந்தர் சிங் ராஜா வார்ரிங், சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா, குர்ஜித் சிங் அவுஜ்லா, தரம்வீர் காந்தி, அமர் சிங், தீபேந்தர் சிங் ஹூடா மற்றும் ஜெய் பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

சார்ந்த செய்திகள்