2019 ஆம் ஆண்டு முதன்முதலில் சீனாவில் பரவ தொடங்கி, பின்னர் உலகமெங்கும் பரவத்தொடங்கிய கரோனா பல்வேறு விதமாக மரபணு மாற்றங்களை அடைந்து வருகிறது. இந்த மரபணு மாற்றமடைந்த கரோனாக்களில் டெல்டா வகை வைரஸ், மற்ற வகை கரோனாக்களை விட அதிகமாக பரவி, அதிகம் பாதிப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
இந்தநிலையில் அண்மையில் தென்னப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்ற அதிகமான மரபணு மாற்றங்களை கொண்ட புதிய வகை கரோனா கண்டறியப்பட்டது. இந்த புதிய வகை கரோனா டெல்டாவை விட அதிவேகமாக பரவி வருகிறது. இந்த ஒமிக்ரான், டெல்டாவை விட அதிக ஆபத்தை ஏற்படுத்தும் எனவும், அதிக ஆபத்தை ஏற்படுத்தாது எனவும் இருவேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன.
இந்தநிலையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் பரவல் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தநிலையில் மஹாராஷ்ட்ராவின் கரோனா பணிக்குழு உறுப்பினரான டாக்டர் ஷஷாங்க் ஜோஷி, டெல்டா கரோனா திரிபும், ஒமிக்ரான் கரோனா திரிபும் இணைந்த டெல்மிக்ரான் கரோனாவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மினி சுனாமி போன்ற கரோனா பாதிப்புக்கு வழி வகுத்துள்ளது என்கிறார்.