/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/delhi656.jpg)
டெல்லியில் உள்ள முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் (Mundka Metro Station) அருகே உள்ள வணிக கட்டிடத்தில் இன்று (13/05/2022) இரவு 09.00மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மற்றொருபுறம், தீயணைப்பு வீரர்கள் வணிக கட்டிடத்திற்குள் சிக்கியுள்ள மக்கள் மற்றும் வணிகர்களைப் பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும், 26பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீ காயங்களுடன் மீட்கப்பட்ட 10 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து டெல்லி தீயணைப்புத்துறையின் துணை தலைமை தீயணைப்பு அதிகாரி சுனில் சவுத்ரி கூறுகையில், "தீ விபத்து ஏற்பட்டபோது, சிலர் கட்டிடத்தில் இருந்து குதித்தனர். அதனால் காயமடைந்த அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்" எனத் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ள குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தீ விபத்து நிகழ்ந்த இடத்திற்கு விரைந்துள்ள காவல்துறை உயரதிகாரிகள், தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)