உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 13 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 29 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவைப் பொறுத்தமட்டில் மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவியது. ஆரம்பத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. இதற்கிடையே கடந்த 15 நாட்களாக கரோனா மீண்டும் உச்சக்கட்ட தாக்குதலை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் கரோனா வீச்சு மிக அதிகமாக இருந்து வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில், கரோனா பாதிப்பு காரணமாக மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் கால வரையின்றி மூடப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.