டெல்லி மேற்கு மக்களவை தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த வேட்பாளர் பால்பீர் சிங் ஜாக்கரின் மகன் உதய ஜாகர் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இதில் தனது தந்தை மூன்று மாதங்களுக்கு முன் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் எனவும் , டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரில்வாலுக்கு தனது தந்தை சுமார் 6 கோடியை கொடுத்து மக்களவை தொகுதியில் போட்டியிட சீட் வழங்கப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளரின் மகனே குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisment

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

அதே போல் எனது தந்தை கட்சிக்கு பணம் கொடுத்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்திருப்பது டெல்லி அரசியல் கட்சிகள் வட்டாரத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி எந்த வித விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மக்களவை தேர்தலில் பாஜகவுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே கடுமையான வார்த்தை போர் ஏற்ட்டுள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளரின் மகனே அக்கட்சி குறித்து குற்றம் சாட்டியிருப்பது அந்த கட்சிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.