Skip to main content

ரத்தன் டாடாவையும் விட்டுவைக்காத டீப் ஃபேக்  

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

nn

 

அண்மையில் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா போல சித்தரிக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையங்களில் வைரல் ஆகியது. பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்து சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து அது AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட டீப் ஃபேக் வீடியோ என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து மத்திய அரசு இதுபோன்ற டீப் ஃபேக் வீடியோக்களை வெளியிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தி இருந்தது. ஆனால் அதனைத் தொடர்ந்தும் பல்வேறு பிரபலங்களைப் போல டீப் ஃபேக் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

 

இந்நிலையில் சமீபத்தில் தொழிலதிபர் ரத்தன் டாடா முதலீடு செய்ய அழைப்பு விடுக்குமாறு பேசி உரையாற்றிய வீடியோ காட்சி ஒன்று வெளியாகி இருந்தது. இந்த நிலையில் அது டீப் ஃபேக் வீடியோ என தெரிய வந்துள்ளது. அந்த வீடியோவை யாரும் நம்ப வேண்டாம் தொழிலதிபர் ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பார்ப்பதற்கே அறுவறுப்பாக உள்ளது' - அதிமுக முன்னாள் நிர்வாகி பேச்சுக்கு த்ரிஷா கண்டனம்

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
'It is disgusting to see'-Trisha condemns the speech of ADMK ex-executive

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகியான ஏ.வி. ராஜு அண்மையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘கூவத்தூர் விவகாரத்தில் நடிகை த்ரிஷாவை தொடர்புப்படுத்திப் பேசியிருந்தார். மேலும் தன்னை அதிமுகவிலிருந்து நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதிமுகவின் சட்ட விதிகளை தெரியாமல் எடப்பாடி பழனிசாமி உள்ளார்’ எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

இந்த நிலையில், கூவத்தூர் விவகாரத்தில் தன்னை தொடர்புப்படுத்தி இழிவாகப் பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜுவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நடிகை த்ரிஷா, இது தொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'கவனம் ஈர்ப்பதற்காக எந்த அளவுக்கும் தரம் தாழ்ந்து பேசுபவர்களை பார்ப்பதற்கே அறுவறுப்பாக உள்ளது. அவதூறு பேச்சுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமது வழக்கறிஞர்கள் தேவையான நடவடிக்கை எடுப்பார்கள்' எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அதிமுக நிர்வாகி ஏ.வி. ராஜுவின் பேச்சுக்கு பல்வேறு சினிமா பிரபலங்களும் கண்டங்கள் தெரிவித்து வந்த நிலையில், தற்போது த்ரிஷா இதை உறுதிப்படுத்தி உள்ளார். இதற்கு முன்பே நடிகர் மன்சூர் அலிகானின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்த, தனது கண்டனத்தை த்ரிஷா தெரிவித்திருந்தார். பின்னர் அது நீதிமன்றம் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.

Next Story

“நாய்கள் மீது பா.ஜ.க.வின் மோகம் எனக்கு புரியவில்லை” - ராகுல் காந்தி 

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Rahul Gandhi says I don't understand BJP's obsession with dogs

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி, 'இந்திய ஒற்றுமைப் பயணம்' என்ற நடைப்பயணத்தை கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி ஸ்ரீநகர் வரை 3,750 கிலோமீட்டர் கடந்து முடித்தார். இதனைத் தொடர்ந்து, இந்திய ஒற்றுமைப் பயணத்தில் இரண்டாம் கட்ட பயணத்திற்கு ‘பாரத் நீதி யாத்திரை’ எனப் பெயரிடப்பட்டு, கடந்த 14ம் தேதி மணிப்பூரில் இருந்து துவங்கினார் ராகுல் காந்தி. இந்த நடைப்பயணம், மார்ச் 20 வரை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. மணிப்பூரில் துவங்கிய இந்தப் பயணம் மும்பையில் முடிகிறது. 

பல்வேறு மாநிலங்கள் வழியாக மேற்கு வங்கம் வந்த ராகுல் காந்தியின் யாத்திரை தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இங்கு மேற்கொண்ட யாத்திரையின் போது, நாய் சாப்பிட மறுத்த பிஸ்கெட்டை தனது ஆதரவாளருக்கு ராகுல் காந்தி கொடுத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையாகி உள்ளது. 

அந்த வீடியோவில், ‘ராகுல் காந்தி தனது திறந்தவெளி வாகனத்தில் வளர்ப்பு நாய் ஒன்றுடன் அமர்ந்திருக்கிறார். அப்போது, அந்த நாய்க்கு பிஸ்கெட் கொடுப்பதற்காக அருகில் உதவியாளரிடம் பிஸ்கெட் பாக்கெட்டை கேட்கிறார். அதன்படி, அந்த நாய்க்கு பிஸ்கெட் ஊட்டியபடி தனது ஆதரவாளர்களுடன் பேசுகிறார். அப்போது, நாய் பிஸ்கெட் ஒன்றை சாப்பிட மறுக்க, அதனை உடனடியாக ராகுல் காந்தி தனது ஆதரவாளருக்கு கொடுக்கிறார்’. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையாகி உள்ளது. மேலும் பா.ஜ.க.வினர் பலரும் ராகுல் காந்தியை விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், ராகுல் காந்தி ஜார்க்கண்டில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், நாய்க்கு கொடுத்த பிஸ்கெட்டை வேறு ஒரு நபருக்கு கொடுத்தது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த அவர், “யாத்திரையின் போது அங்கிருந்த நாயையும் அதன் உரிமையாளரையும் அழைத்தேன். நாய் பதற்றமாகவும், நடுக்கமாகவும் இருந்தது. அதற்கு நான் உணவளிக்க முயன்றபோது நாய் பயந்து போனது. 

அதனால், நாயின் உரிமையாளரிடம் பிஸ்கெட்டை கொடுத்தேன். அந்த நாய் அவர் கையில் இருந்த பிஸ்கெட்டை சாப்பிட்டது. இதில் என்ன பிரச்சனை என்று எனக்குப் புரியவில்லை” என்று கூறினார். அப்போது, அந்த நபர் காங்கிரஸ்காரர் என்று பா.ஜ.க. வைத்திருக்கும் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “இல்லை. அவர் காங்கிரஸ்காரர் இல்லை. நாய்கள் மீது பா.ஜ.க வைத்திருக்கும் மோகம் எனக்கு புரியவில்லை” என்று கூறினார்.