Skip to main content

காவிரி ஆணையத்தில் மேகதாது குறித்த விவாதம்... தமிழக அரசு கடும் எதிர்ப்பு!

Published on 27/09/2021 | Edited on 27/09/2021

 

 Debate on Megha Dadu in Cauvery Commission ... Tamil Nadu strongly opposes!

 

தமிழக-கர்நாடக எல்லையில் மேகதாது அணை கட்டுவது தொடர்பாகக் கர்நாடக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல் தமிழக அரசு சார்பிலும் மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருவதோடு, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அண்மையில் மத்திய நீர்வளத் துறை அமைச்சரைச் சந்தித்து இது தொடர்பாகப் பேசியிருந்தார்.

 

தொடர்ந்து காவிரியில் மேகதாது அணைக் கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக இருப்பதாக அண்மையில் கர்நாடக முதல்வராகப் பொறுப்பேற்ற பசவராஜ் பொம்மை தெரிவித்திருந்தார். இதில் எவ்வித சமரசத்திற்கும் இடம் இல்லை என்றும்  தெரிவித்திருந்த பசவராஜ் பொம்மை, மேகதாது அணை விவகாரம் குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார். இந்நிலையில் நடக்கவிருக்கும் காவிரி  நதிநீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கத் தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்