
கொசு விரட்டி மருந்திலிருந்து உருவான புகையை சுவாசித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
டெல்லியில் சாஸ்திரி பார்க் பகுதியில் ஒரு வீட்டில் 6 பேர் சடலமாக மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் வீட்டிலிருந்த ஆறு பேரும் இரவு முழுவதும் கொசு விரட்டி மருந்திலிருந்து வெளியான புகையை சுவாசித்தது தெரியவந்துள்ளது. கொசு விரட்டி மருந்திலிருந்து வெளியான கார்பன் மோனாக்சைடு வாயுவை சுவாசித்து இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதாக டெல்லி காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உடற்கூறாய்வுக்குப் பிறகே முழு விவரம் தெரிய வரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.